Wednesday, October 31, 2012

சூரிய ஒளி மின்சாரம் - 10



சூரிய ஒளி மின்சாரம் (Solar Power Energy)- பகுதி-10




சூரிய ஒளி மின்சாரம் (Solar Power Energy)- பகுதி-10

இதுவரை பதிவிட்ட பகுதிகளை படித்ததின் மூலம்சோலார் மின்சாரம் என்றால் என்னஅது எப்படி நமக்கு தேவைப்படும் 230V ஏ.சி மின்சாரமாக மாற்றப்படுகிறது,அதற்கு என்னென்ன உபகரணங்கள் தேவைஅவற்றின் வேலை என்ன என்பதை புரிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். இறுதியாக சில விஷயங்கள்.

1. இது நீண்ட கால முதலீடு.
2. இந்த சிஸ்டத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களில் பி.வி. மாடுல்ஸ் எனப்படும் சோலார் பேனல்களின் ஆயுட்காலம் 25 ஆண்டுகளுக்கு மேல் 15 ஆண்டுகளுக்கு 90%செயல்படும் திறனுக்கும், 20 ஆண்டுகாலம் வரை 80% செயல் திறனுக்கும் உத்திரவாதம் உண்டு. 

3. 
அடுத்து சார்ஜ் கண்டிரோலர். இதற்கும் சில வருட கால உத்திரவாதம் உண்டு.ஸ்டாண்டார்டு கம்பெனி தயாரிப்பாக இருந்தால் சர்வீஸ் சென்டரில் ரிப்பேர் செய்யும் வசதி உண்டு.அல்லது புதிதாக வாங்கி மாட்டவேண்டும். இது முற்றிலும்எலெக்ட்ரானிக்ஸ் சாதனம்.
4. இன்வெர்ட்டர். இது எளிதில் பழுதாகாது. அப்படி ஆனால் சர்வீஸ் சென்டரில் கொடுத்து சரி செய்துகொள்ளலாம்.

5. 
பாட்டரி. இதற்கும் 2-3 வருட உத்திரவாதம் உண்டு. பொதுவாக 4-5 ஆண்டுகள்உழைக்கும்(என் அனுபவத்தில்). அதற்கு பின் புது பாட்டரியை இணைக்க வேண்டும்.

6. 1KW மின் உற்பத்தி திறன் கொண்ட சோலார் சிஸ்டத்தை அமைக்க அரசின் அங்கீகாரம் பெற்ற டீலர்களின் அதிக பட்ச ரேட் ரூ. 250000/- .  இதில் மானிய தொகை ரூ.81000/- ஐ கழித்தால் நாம் செலவு செய்ய வேண்டிய தொகை ரூ.170000/- ஆகும்.டீலர்கள் கூறும் ரேட் பேரத்திற்கு உட்பட்டது.


7. 
கடன் வசதி தேவை என்றால் வங்கியை அனுகலாம்.
8. இந்த சோலார் சிஸ்டம் நாள் 1-க்கு 5000W அல்லது யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடியது. 

9. 
நீங்கள் அமைக்க விரும்பினால் "Tamil Nadu Energy Development Agency" தொடர்பு கொண்டு தகவல் பெறலாம். அவர்களின் வெப்சைட்டை பார்வையிட இதை கிளிக் 

(http://www.teda.in/index.php?r=site/index&id=3J1o5S9d2d) செய்யவும்.
10. நான் ஏற்கனவே அரசின் அங்கீகாரம் பெற்ற உற்பத்தியாளர்களின் பட்டியலைமுன்பே கொடுத்துள்ளேன். அதில் லாண்டர்ன் விளக்குசோலார் தெரு விளக்கு,வீட்டிற்கான சிறிய அளவிலான சிஸ்டம்சோலார் வாட்டர் ஹீட்டர், 1KW சோலார்பவர் சிஸ்டம் ஆகிய அனைத்துக்குமாக சேர்த்து கொடுக்கப்பட்டுள்ள பட்டியல்ஆகும். இந்த பட்டியலில் 4-வது காலத்தில் "PRODUCT" என குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் எந்ததெந்த  உற்பத்தியாளர்களுடைய 4-வது காலத்தில் "Solar Photovoltaic Systems" என குறிப்பிடப்பட்டுள்ளதோஅவர்கள் மட்டுமே 1KW சிஸ்டத்தை அமைக்க அனுமதி பெற்றவர்கள். வரிசை எண்:57,58,67-73-ல் குறிப்பிடப்பட்டவர்கள(நபர்கள்) மட்டுமே. 

சூரியஒளி மின்சாரம் - 9


சூரியஒளி மின்சாரம் (Solar Power Energy)– பகுதி-9



சூரிய ஒளி மின்சாரம் (Solar Power Energy)  பகுதி-9

மத்திய அரசின் MNRE -ன் அங்கீகாரம் பெற்ற உற்பத்தியாளர்கள் மற்றும் அவர்களின் விற்பனை பிரதிநிதிகளின் முகவரியை தெரிந்து கொள்ள கீழே  லிங்க்கை சொடுக்குக. இது பி.டி.எஃப் பைல்.இதிலிருந்து உங்கள் ஊரில் அல்லது அருகாமையில் உள்ள டீலர்களை அணுக உங்களுக்கு வசதியாக இருக்கும். இந்த லிங்க்-கை கிளிக் செய்யவும்.


இனி மத்திய அரசின் இந்த மானிய திட்டத்தை தமிழ்நாடு அரசு எப்படி செயல் படுத்துகிறது என்பதை பார்க்கலாம். வாட்ஸ்-க்கு பாட்டரியுடன் கூடிய சிஸ்டத்திற்கு ரூ.81 /-, பாட்டரி இல்லாத சிஸ்டத்திற்கு ரூ.57 /- என்ற கணக்கில் மானியம் வழங்குகிறது. அதன் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



 

தமிழக அரசின் "Tamil Nadu Energy Development Agency தான் இத்திட்டத்தை செயல்படுத்துகிறது. இவர்களால் அங்கிகரிக்கப்பட்ட டீலர்களின் விபரப்பட்டியலின்லிங்க் கீழே தரப் பட்டுள்ளது. லிங்க்-ஐ கிளிக் செய்யவும். 

இந்த பட்டியலில்இந்த திட்டத்திற்காகவே உருவான லெட்டர் ஹெட் கம்பெனிகளும் இருக்கலாம். இவர்களிடம் தரமான பொருட்களையோ அல்லது நியாயமான விலையையோ எதிர்பார்க்க முடியாது. அதோடு இந்த சிஸ்டம் 25 ஆண்டுகளுக்கு மேல் செயல்படக்கூடியது. பி.வி மாடுல்ஸ்-களுக்கு 25 ஆண்டு கால உத்திரவாதம் உண்டு.

சூரிய ஒளி மின்சாரம் - 8


சூரியஒளி மின்சாரம் (Solar Power Energy) – பகுதி-8





மத்திய அரசு "Ministry of Renewable Energy - (MNRE)" அமைச்சகத்தின் மூலம் சூரிய ஒளியை சக்திக்கு பயன்படுத்த பொது மக்களை ஊக்குவிக்கும் வகையில் மானியம் வழங்கி வருகிறது. நேரடியாக இத்திட்டத்தை எல்லா மாநிலங்களி லும் National Bank for Agricultural and Rural Development - NABARD" மூலமாகவும்மாநில அரசுகளின் மின்சக்தி மேம்பாட்டு ஏஜன்ஸிகளின் மூலமாகவும் செயல்படுத்துகிறது. அது பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

நிதி உதவி தேவைப்படுபவர்கள் நபார்டு வங்கியை தொடர்பு கொண்டு விபரங்களைபெற்று கடனுக்கு விண்ணப்பிக்கலாம். மானிய தொகை நீக்கி மீதியுள்ள தொகையில் குறிப்பிட்ட சதவிகிதம் கடனாக வழங்கப்படும்.  MNRE-யால் அங்கீகாரம் வழங்கப்பட்ட சப்ளையர்களிடமிருந்தே வாங்கவேண்டும். அரசுடமை யாக்கப்பட்ட வங்கிகளையும் கடன் வழங்குமாறு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது. அவர்களையும் தொடர்பு கொள்ளலாம்.
MNRE - யால் அங்கீகரிக்கப்பட்ட மாடல்கள்அவற்றின் விலைஅதற்கு கிடைக்கும் மானியம் இவற்றை விளக்கும் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
 


மேலே குறிப்பிடப்பட்டுள்ள மாடல்களுக்கு அதில் உபயோகப்படுத்தப்படும் பி.வி.மாடுல்ஸ் (சோலார் பேனல்) வாட்ஸ்சின் அளவை பொருத்து ஒரு வாட்டுக்கு ரூ. 108 / - என்ற அளவில் மானியம் நிர்ணயம் செய்யப்படுகிறது.
வங்கி கடன் தேவை இல்லை என்றால் நாம் நேரடியாக அங்கீகாரம் பெற்ற சப்ளையர்கள் அல்லது உற்பத்தியாளர்களை அணுகினால் அவர்களே மானிய தொகைக்கு ஏற்பாடு செய்வார்கள். வாங்கப்படும் சிஸ்டத்திற்கு MNRE பொறுப்புகிடையாது. எனவே அவர்களுடைய பட்டியலில் உள்ள நல்ல டீலரை தேர்வு செய்ய வேண்டிய அவசியம் நமக்கு உண்டு. உத்திரவாதம்சர்வீஸ் ஆகிய வற்றை செய்து தருபவராக இருக்கவேண்டும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள சோலார் சிஸ்டம் மிக குறைந்த வாட்ஸ் கொண்டது என்பதால்கிராமப்பகுதி மக்களுக்கே பயன்படும் எனநினைக்கிறேன்

சூரியஒளி மின்சாரம்-7


சூரியஒளி மின்சாரம் (Solar Power Energy) – பகுதி-7


கிரிட்-டை சோலார் சிஸ்டம் (Grid-Tie Solar Power System)

கிரிட்-டை என்றால் மின்வாரிய இணைப்புடன் இணைக்கப்பட்டது என பொருள். அதாவது நாம் சோலார் சிஸ்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் நம் தேவைக்கு அதிகமாக இருந்தால்அதிகப்படியான மின்சாரத்தை மின்வாரியத்திற்கு விற்கவும்குறைவாக இருந்தால் குறைவாக இருந்தால் அதை மின்வாரியத்திடம் இருந்து பெறும் வகையில் அமைக்கப்படுவதேகிரிட்-டை சிஸ்டம் ஆகும்.
உதாரணத்திற்கு நாம் நாள் ஒன்றுக்கு 15 யூனிட் (15,000W)மின்சாரத்தை சோலார் மூலம் உற்பத்தி செய்வதாக வைத்துக்கொள்வோம் சராசரியாக நமக்கு 8-10 யூனிட்டுகள்தான் உபயோகத்திற்கு தேவை. தினந்தோறும் உற்பத்தியாகும் அதிகப்படியான மின்சாரத்தை பாட்டரி பேங்க்-ன் திறன் எவ்வளவோஅந்த அளவுக்கு தான் சேமிக்க முடியும். அதன்பின் தினமும் உற்பத்தியாகும் அதிகப்படியான மின்சாரம் வீணாகிக்கொண்டே இருக்கும்.

சில நாட்களில் நமக்கு உற்பத்திக்கு மேல் அதிகமாக மின்சாரம் தேவைப்படும். எனவே தேவைப்படும் பொழுது பற்றாக்குறை மின்சாரத்தை மின்வாரியத்திட மிருந்து பெறவும்தேவை இல்லாதநேரத்தில் அதிகப்படியான உற்பத்தி மின்சாரத்தை மின்வாரியத்திற்கு விற்று விடவும் இந்த அமைப்பால் முடியும். இதற்கு மின்வாரியத்துடன் நெட்-மீட்டரிங் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். அமெரிக்காகனடாஇங்கிலாந்து,ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இந்த முறை அமுலில் உள்ளது. கீழே உள்ள படத்தை பார்க்கவும்.
 

இந்த சிஸ்டத்தில் மீட்டர் பொறுத்தும் முறையில் ஒவ்வொரு நாடும் வெவ்வெறு முறைகளை பயன்படுத்துகிறது. மேலே காட்டப்பட்ட படம் பாட்டரி பேங்க் இல்லாத சிஸ்டத்திற்கு உரியது. மின்வாரியத்திடமிருந்து அவர்கள் பெறும் மின்சாரத்திற்கு வீடுகளுக்கான ரேட்டும்அவர்கள் மின் வாரியத்திற்கு விற்கும் உபரி மின்சாரத்திற்கு அதிகப்படியான ரேட்டும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் ஆர்வத்துடன் தேவைக்கு மேல் திறன் கொண்ட சிஸ்டத்தை அமைத்து லாபம்பெறுகிறார்கள். அரசுக்கும் மின் பற்றாக்குறை ஓரளவிற்கு குறையும்.

பாட்டரி பேங்குடன் கூடிய கிரிட்-டை சோலார் சிஸ்டம்

வட நாட்டில் சில மாநிலங்களில்நம் தேவைக்கு அதிகமாக உற்பத்தியாகும் மின்சாரத்தை கிரிட்-டை இன்வெர்டர் மூலமாக மின்வாரியத்திற்கு திருப்பி கொடுக்கும் திட்டம் அமுலில் உள்ளது. அதாவது நம்மிடமிருந்து மின்வாரிய சப்ளைக்கு மின்சாரத்தை நம் இன்வெர்டர் அனுப்பும் பொழுது மின்வாரிய மீட்டர் எதிர்திசையில் சுற்றிமீட்டர் ரீடிங் மின்அளவுக்கு ஏற்ப குறையும். இரு திசையிலும் (Clockwise&Anti-clockwise) சுற்றக்கூடிய மீட்டரை பொருத்தி விடுகிறார்கள். இதனால் மின்வாரிய சப்ளையிலிருந்து உபயோகித்த மின்சாரத்தி லிருந்துநாம் அவர்களுக்கு கொடுத்தமின்சாரத்தை கழித்து மீதி உள்ள மின்சாரத்தின் அளவையே அது காட்டும். நாம் அதிகமாக கொடுத்திருந்தால் அதற்கான கட்டணத்தை நமக்கு தரும். இந்த தகவலை என்னால் ஊர்ஜிதம் செய்ய முடியவில்லை.
ஆஃப்-கிரிட்(Standalone) சிஸ்டத்திற்கும்கிரிட்-டை சிஸ்டத்திற்கும்,இன்வெர்ட்டர் தவிர வேறு எந்த மாற்றமும்  கிடையாது. கிரீட்-டை சிஸ்டம் அமைத்தால்இன்வெர்ட்டர் எப்பொழுதும் ஆன்(ON)நிலையிலேயே இருக்க வேண்டும். காரணம்மின்வாரிய இணைப்பு இன்வெர்ட்டர் மூலமாகத்தான் வீட்டு இணைப்புக்கு வரும். மேலும் நாம் மின்சாரத்தை உபயோகிக்காமலிருந்தாலோ அல்லது குறைவாக மின்சாரத்தை உபயோகித்துக்கொண்டிருந்தாலோ,சோலார் மின்சாரம்  கிரிட் எனப்படும் மின்வாரிய சப்ளைக்கு போய்கொண்டிருக்கும். அதனால் நமக்கு பாட்டரியில் பேக்-அப்மின்சாரம் இருக்காது. எனவே பாட்டரிக்கும் இன்வெர்ட்டருக்கும் இடையிலான இணைப்பில் ஆன் -ஆஃப் (ON-OFF) சுவிட்ச் இணைக்க வேண்டும். இது பற்றி தனியாக ஒரு பதிவு வரும்.

Tuesday, October 30, 2012

சூரியஒளி மின்சாரம்-3



சூரிய ஒளி மின்சாரம்(Solar Power Energy) - பகுதி.3





டி.சி. கரண்ட் (DIRECT CURRENT) - ஏஸி கரண்ட் (ALTERNATIVE CURRENT)

டி.சி கரண்ட் என்பது பாட்டரி மற்றும் சோலார் செல்கம்யூடேட்டர் டைப் டைனமோ ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் மின்சாரம் ஆகும். டிசி மின்சாரத்தை நெடுந்தொலைவுக்கு கொண்டு செல்ல முடியாது. அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அதிக அளவு இழப்பு ஏற்படும். எனவே டி.சி மின்சாரம் இப்பொழுது வீட்டு உபயோகம்தொழில்சாலைகளுக்கு உகந்தது அல்ல. ஏ.சி மின்சாரம் என்பது ஆல்டர்னேட்டர் அல்லது ஜெனெரேட்டர் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரமாகும். குறைந்த இழப்பில் இதை நெடுந்தொலைவிற்கு எடுத்து செல்ல முடியும். எனவே தான் இது இப்பொழுது வீட்டு உபயோகம்தொழில்சாலை ஆகியவற்றிற்கு பயன் படுத்தப்படுகிறது.

டி.சி மின்சாரம்ஏ.சி மின்சாரம் ஆகியவற்றிற்குரிய வேறுபாட்டை கீழே உள்ள படம் விளக்குகிறது.

முதல் படத்தில்,பாட்டரியின் பாஸிடிவ் முனையிலிருந்து எலெக்ட்ரான்கள் லோடு என கூறப்படும் பல்பு அல்லது டி.சி மின்சாரத்தில் இயங்கக்கூடிய சாதனத்திற்கு சென்று மறு முனைவழியாக பாட்டரியின் நெகடிவ் முனைக்கு செல்லுகிறது. இவ்வாறு தொடர்ச்சியாக ஒரே திசையில் எலெக்ட்ரான்கள் டி.சி மின்சாரத்தில் பயணிக்கும்.
இரண்டாவது படத்தை பாருங்கள்.  பாட்டரிக்கு பாசிடிவ் நெகடிவ் என இரு முனைகள் இருப்பது போல ஏ.சி மின்சாரத்திற்கு பேஸ்(Phase),  நியூட்ரல் (Neutral) என இரு முனைகள் உண்டு. இது சுருக்கமாக P, N என அழைக்கப்படும்.
இந்த படத்தில் ஏ.சி. கரண்ட்டின் எலெக்ட்ரான்கள் இரு திசையிலும் மாறி மாறி செல்வதை அம்பு குறியீடு காட்டுகிறது. அதாவது பேஸ் முனையிலிருந்து எலெக்ட்ரான்கள் லோடுக்கு சென்று மறு முனை வழியாக ஏசி மின்சாரத்தின் நியூட்ட்ரல் முனைக்கு செல்லும். அடுத்து நியூட்ரல் முனை வழியாகஎலெக்ட்ரான்கள் லோடுக்கு சென்று பேஸ் முனையை அடையும். இவ்விதம் வினாடிக்கு 50 சுழச்சிகள் (CYCLES) நடைபெறும். நம் நாட்டில் உள்ள மின் இனைப்புகள் 220V.AC,50Cycle/sec ஆகும். இப்பொழுது உங்களுக்கு ஏசிடி.சி மின்சாரத்தின் வேறுபாடு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.
சோலார் சிஸ்டம் வடிவமைத்தல்.

சோலார் மின்சாரத்தின் தேவை ஒவ்வொரு நபரை பொருத்தும் மாறுபடும். அவற்றை பார்ப்போம். 
இரவில் காய்கறிபழம்போன்றவற்றை தள்ளுவண்டியில் வைத்து இரவில் வியாபாரம் செய்பவர்கள் பெட்ரோமாக்ஸ் லைட்அல்லது சிமினி விளக்குகளை உபயோகிக்கிறார்கள். மண்ணெண்ணைக்காக வருமானத்தில் ஒரு கணிசமான பகுதியை செலவு செய்கிறார்கள்.இவர்களுக்கு சோலார் மின்சாரம் லாபகரமானது.  பகலில் சோலார் பேனல் மூலம் பாட்டரியை சார்ஜ் செய்துஇரவில் உபயோகிக்க கூடிய வைகையில் சோலார் லாண்டர்ன் (Solar Lantern)  எல்ல ஊர்களிலும் கிடைக் கின்றன.  இதை எமெர்ஜென்சி விளக்காகவும்பயன்படுத்தலாம்.  மின்சாரமே இல்லாத பகுதியில் வசிக்கும் குடிசைவாசிகளுக்கு மிகவும் பயன்படும். அதன்படம் கீழேஇது பலவடிவங்களில் கிடைக்கிறது. இவற்றை டாட்டா ( TATA BP) போன்ற பெரிய கம்பெனிகள் முதல் லோக்கல் டுபாக்கூர் கம்பெனிகள் வரை தயாரிக்கிறது. இதை அரசிடம் பதிவு செய்த சப்ப்ளையர்கள்/தயாரிப்பாளகளிடம் வாங்கினால் அரசு மானியம் உண்டு. விபரங்கள் கடைசி பகுதியில் தருகிறேன். 

மின் இணைப்பு இல்லாத கிராமங்களிலிருக்கும் வீடுகளுக்கு இரண்டு அல்லது மூன்று லைட்டுகள் எரியும் வகையில் வீட்டின் மேல்பகுதியில் ஓடு அல்லது ஆஸ்பெட்டாஸ் ஷீட் கூறையிலும்சோலார் பேனலை அமைத்து  CFL பல்புகளை எரிய வைத்து வெளிச்சத்துக்கான மின்தேவையை பூர்த்தி செய்யலாம்.


ஆக மொத்தத்தில் நம் தேவைக்கு ஏற்ப சிஸ்டத்தை அமைத்துக்கொள்ளலாம். இதற்கும் அரசு மானியம் உண்டு.

1 K Watt (1000 Watts) சோலார் சிஸ்டம்

ஒரு கிலோ வாட் (1000 வாட்) சோலார் சிஸ்டம் என்பதுசூரிய ஒளியிலிருந்து ஒரு மணி நேரத்தில் கிலோ வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடியது ஆகும். இதை எப்படி கணக்கிடுவது என்பதை பார்க்கலாம்.  சோலார் பேனல்கள் பல அளவுகளில்  50 W -12V/24V , 75 W - 12V/24V, 80W - 12V/24V, 100W - 12V/24V, 150W - 12V/24V, 200W - 12V/24V என கிடைக்கிறது. அதாவது 50வாட் சோலார் பேனல்கள்12வோல்ட் மின் அழுத்தம், 24 வோல்ட் மின் அழுத்தம் ஆகிய இரு மின் அழுத்த அளவுகளில் கிடைக்கிறது. இதைப்போலவே மற்ற வாட் பேனல்களும் கிடைக்கிறது.


எனவே 12வோல்ட் சிஸ்டம் அல்லது 24வோல்ட் சிஸ்டம் இவற்றில் எது நமக்கு தேவை என்பதை முதலில் முடிவுசெய்யவேண்டும்.  12வோல்ட் சிஸ்டம் என்றால் 100W-12V பேனல்  = 10 (100W x 10 = 1000W) அல்லது 200W-12V பேனல்  = 5 (200W x 5 =1000W) தேவை. இவற்றை பேரலெல் முறையில் இணைக்க வேண்டும். உதாரணத்திற்கு பேனல்கள் இணைக்கப்பட்டுள்ளதை விளக்கும்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



இப்பொழுது பேனல்களிலிருந்து வெளியே வரும் பாஸிடிவ் மற்றும் நெகடிவ் முனைகளின் வழியாக 1 KW -12V (1000W-12V)  டி.சி மின்சாரம் கிடைக்கும்.
நீங்கள் 24 வோல்ட் சிஸ்டம் என முடிவு செய்தாலும் மேலே குறிப்பிட்டபடியே 1000 வாட்டுக்கு தேவையான 24வோல்ட் மின் அழுத்தம் கொண்ட பேனல்களை  இணைக்க வேண்டும்.
ஒருவேளை  24 வோல்ட் பேனல் கிடைக்கவில்லை என்றால்பத்து12 வோல்ட் பேனல்களையே சீரியஸ் + பேரெலெல் என்ற கூட்டு இணைப்பின் மூலம் இணைக்க முடியும்.  இரண்டு 12 V பேனல்களை சீயஸ் முறையில் இணைத்தால் அது 24V ஆக செயல்படும். முதலில் இரண்டு இரண்டாக பேனல்களை சீரியஸ் முறையில் இணைக்க வேண்டும். இப்பொழுது செட் பேனல்கள் கிடைக்கும். இவற்றை பேரலெல் முறையில் இணைக்க வேண்டும். இப்பொழுது இந்த பேனல்களின் பாஸிடிவ் மற்றும் நெகடிவ் முனைகள் வழியாக 1KW-24V மின்சாரம் கிடைக்கும். இந்த இணைப்பை விளக்குவதற்காக நான்கு 12V பேனல்கள் இம்முறையில் இணைக்கப்பட்டுள்ள படம் கீழே தரப்பட்டுள்ளது.




இப்பொழுது நீங்கள் விரும்பிய வகையில் 1KW -12V அல்லது 1KW-24V சோலார் பேனல்களை இணைத்து விட்டீர்கள். இவ்வாறு அமைக்கப்படும் அமைப்பை  ஆங்கிலத்தில் "ARRAY" என கூறுவோம்.
இவ்வாறு அமைக்கப்பட்ட சோலார் பேனல் அமைப்பின் மூலம் ஒரு நாளைக்கு எவ்வளவு மின்சாரம் கிடைக்கும் என்பதை பார்க்கலாம். 100W பேனல் என்றால், அது ஒரு மணி நேரத்தில்100W மின்சாரத்தை தரும் என்று பொருள். எனவே நாம்அமைத்திருக்கும் ARRAY எனப்படும் சோலர் அமைப்பு ஒரு மணி நேரத்திற்கு 1KW அல்லது 1000W மின்சாரத்தை உற்பத்தி செய்யும். சூரிய ஒளி பிரகாசமாக இருப்பது எத்தனை மணி நேரம் என்பதை பார்க்கலாம். பொதுவாக காலை மணி முதல் மாலை 3மணிவரை, மணி நேரம் என வைத்துக்கொள்ளலாம். இதை சராசரியாக நாள் ஒன்றுக்கு மணி நேரம் என கணக்கிட்டால் நாம் குறைந்த பட்சம் 5KW அல்லது 5000W (வாட்) மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.
அதாவது 1KW சோலார் பேனல் சிஸ்டம் நமக்கு நாள் ஒன்றுக்கு5KW அல்லது 5000 வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும்.